ஜோதிகா பேசியதில் என்ன தவறு?

நம்மூரில் ஒரு பிரபலம் எதாவது ஒரு நல்ல விசயத்தைப் பேசினால் பலருக்குப் பொருக்காது. சமீபத்தில் நடிகை ஜோதிகா, “கோவில்களைப் பராமரிப்பதைப் போல கல்விக்கூடங்களையும் பராமரிக்கணும்” என்ற தொனியில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இதற்கு பல கருத்துப் புலவர்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். நியாயமாகப் பார்த்தால் ஜோதிகாப்.பேசியதை இச்சமூகம் ஏற்றுக்கொண்டு அவரது கருத்தைப் பாராட்டத்தான் வேண்டும். கோவில்களில் படிக்கும் ஆன்மிக விசயங்களை விட கல்விக்கூடங்களில் படிக்கும் அறிவியல் விசயங்கள் தான் நாட்டுக்குத் தேவை. எல்லாவற்றையும் அரசியலாக்குவது எவ்வகையில் அறமாகும்?