வெளிச்சத்துக்கு வரும் அமலாபாலின் சுயரூபம்! : எல்லாம் ஒரு ‘கணக்கு’ தான்!

Get real time updates directly on you device, subscribe now.

amala-paul

ணவரும், இயக்குநருமான ஏ.எல்.விஜய் அனுமதி கொடுத்து விட்டதால் திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அமலாபால்.

ஹீரோக்களைப் போல திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயின் வேஷம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்காமல் ( அடம்பிடித்தாலும் அது கிடைக்காது என்பது வேறு விஷயம்!) தேடி வருகிற கேரக்டர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தற்போது மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தமிழ், ஹிந்தி இரு மொழிகளில் தயாராகும் ”அம்மா கணக்கு” என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

Related Posts
1 of 11

தனுஷ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, ரேவதி மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தில் தனது கேரக்டரைப் பற்றி வருவோர், போவோர், தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லாரிடத்திலும் சிலாகித்து பேசுவது தான் அமலாபாலின் சமீபத்திய முக்கிய வேலையாம்.

”இதுவரை நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் தான் நான் நடித்த கேரக்டர் என்னுடைய ஒரிஜினல் கேரக்டருடன் நூறு சதவீதம் பொருந்திப் போகிற மாதிரி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்த போது நடிப்பது போன்ற உணர்வே இல்லை. அந்தளவுக்கு பிரமாதமான கேரக்டர்” என்று சந்தோஷப்படுகிறார்.

அப்போ இதுல தான் உங்களோட சுயரூபம் தெரியும். அப்படித்தானே மேடம்?