அனுஷ்காவால் தினம் 50 இலட்சம் நஷ்டமா..?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனுஷ்கா நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் “நிசப்தம்”. மாதவன், அஞ்சலி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் படத்தினை பெரும் தொகை கொடுத்து வாங்கி தங்களது ஓடிடி இணையதளம் வழியாக வெளியிட பிரபல நிறுவனம் ஒன்று முன் வந்ததாகவும், அது தொடர்பான விளம்பரத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டதால் வியாபாரம் முடியவில்லை என்றும், இதனால் ஒவ்வொரு நாளும் 50 இலட்ச ரூபாய் அளவில் தயாரிப்பாளர் தரப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் செய்தி வெளியானது. இதற்கு தயாரிப்பாளர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் தரப்பில் ”இது போன்று எதுவும் நடக்கவில்லை, படக்குழுவினரைப் போலவே நாங்களும் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்” என்று விளக்கமளித்துள்ளனர்.