பட வாய்ப்புக்காக சென்னைக்கு குடிவந்த அஜ்மல்

Get real time updates directly on you device, subscribe now.

AJMAL

திருதிரு துருதுரு, அஞ்சாதே, கோ, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று பிஸியாகி விட்டார் .

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது, திரும்பவும் மலையாள படவுலகிற்கு போனவருக்கு மோகன்லாலுடன் சேர்ந்து ஒரு படத்தில் தமிழனாக நடித்திருக்கிறார் .

இப்படி மூன்று மொழிகளிலும் நடித்து வருபவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவே அதிக ஆசையாம். இதற்காகவே மலையாளம், தெலுங்கு படங்களுக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்து விட்டு முழுக்க முழுக்க தமிழ் படத்தில் கவனம் செலுத்தப் போகிறாராம். அதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டாராம். நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்காக கதை கேட்டு வருகிறார் .

இனி தமிழில் ஒரு நல்ல இடத்தை பெரும்வரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றவர் இதற்காக ஒரு ஹிந்தி பட வாய்ப்பை கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் .