தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன தெலுங்கு ஹீரோ

நீங்கள் வீட்டில் பத்திரமாக இருங்கள் நாங்கள் நாட்டைப் பார்த்துக் கொள்கிறோம் என்ற கோசத்தோடு தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 99 பேர் தமிழக எல்லைக்கு மீன் பிடிக்க வந்துள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் துறைமுகத்திலே மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கான உதவியை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பவன் கல்யாண் கோரிக்கை வைத்திருந்தார். அதைக் கவனத்தில் கொண்ட முதல்வர் எடப்பாடி துரித நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காகத் தான் பவன் கல்யாண் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்