சங்கத் தமிழனுக்காக டப்பிங் பேசிய விஜய் சேதுபதி
60க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சங்கத்தமிழன் என்ற படத்தை தயாரித்து வருகிறது.
விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். அவருடன் ராஷிக்கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் நடைபெற்று முடிவுபெற்ற நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.