டேனி படத்தில் துரை சுதாகரின் பங்கு என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார்.

தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தில் மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமி அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது.

பிறகு வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்கிறார்கள்.

வரலட்சுமி அளவிற்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக செய்திருக்கிறார் துரை சுதாகர். இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இவரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.