ஜனவரியில் வெளியாகும் ராஜமெளலி படம்

Get real time updates directly on you device, subscribe now.

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான ” யமதொங்கா ” எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன் குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ் ,ரம்பா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். விஜயேந்திர பிரசாத் கதை எழுதிய இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருந்தார் . கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இவர்கள் அனைவரும் நான் ஈ , பாகுபலி , பாகுபலி2 ஆகிய படங்களில் பணியாற்றியவர்கள் .

பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ‘யமதொங்கா’ தமிழ் மொழியில் தற்போது டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக உள்ளது . ARK ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார் .