குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட்ட மாதவன் : வெடித்தது சர்ச்சை!

Get real time updates directly on you device, subscribe now.

Madhavan1

கூடிய சீக்கிரத்திலேயே சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு வைக்க வேண்டிய நிலைமை வந்து விடும் போலிருக்கிறது,

ஏற்கனவே ‘ரியாலிட்டி ஷோக்கள்’ என்ற பெயரில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆபாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

இந்த சூழலில் அவ்வப்போது டிவி பிரபலங்கள் உற்சாக மிகுதியில் செய்யும் சில செயல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விடுகின்றன.

ஏற்கனவே ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சிக்காக உலக நாயகன் கமல்ஹாசன் வந்த போது அவருக்கு வம்படியாக முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் டி.டி என்கிற திவ்யதர்ஷினி.

பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி நார்மல் மோடுக்கு வர, இப்போது அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு.

Related Posts
1 of 2

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற பெயரில் திரைப்பிரபலங்களை நேரில் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியை தயாரித்து நடத்தி வருகிறார் நடிகைகுஷ்பு.

வாரா வாராம் திரையுலக பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு பேசும் குஷ்பு அடுத்த வாரம் ‘இறுதிச்சுற்று’ படம் ரிலீஸ் ஆவதையடுத்து மாதவனை சந்தித்து பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே மாதவன் ஜாலியாக குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட வெடித்து விட்டது சர்ச்சை!

”அதெப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் மாதவனும், குஷ்புவும் இப்படி ஆபாசமாக நடந்து கொள்ளலாம்” என்று கருத்து கந்தசாமிகள் ட்விட்டரில் தெறிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னொரு பக்கம் ”இதே மாதிரியான காட்சி டிவியில் போடப்படுகிற திரைப்படங்களில் வரும்போது மட்டும் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள், இது என்ன விதமான நடுநிலை? என்றும் மாதவன் – குஷ்பு செயலுக்கு ஆதரவுக்குரல்கள் ஒலிக்கின்றன.

பட் இந்த மாதிரி சர்ச்சைகளையெல்லாம் சமாளிக்கிறது குஷ்புவுக்கு ஒரு மேட்டரே இல்லை…. அப்படித்தானே மேடம்..?