ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஹிட்டு கெடைச்சிருக்கு… : சூதானமா இருங்க மாதவன் ஜி

Get real time updates directly on you device, subscribe now.

mathavan

”என்னை தமிழ்சினிமாவில் நடிக்க விடாமல் செய்வதற்கான வேலைகள் கூட நடந்தது. ஒரு கட்டத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியேறி விடலாமா? என்று கூட யோசித்தேன். ஆனால் இப்போது படத்தின் வெற்றி என்னை இன்னும் நல்ல படங்களை தொடர்ந்து செய்வதற்கான உத்வேகத்தை கொடுத்திருக்கிறது”.

‘இறுதிச்சுற்று’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய வார்த்தைகள் இவை.

ஒரு கட்டத்துக்கு மேல் தமிழில் வாய்ப்பே இல்லாமல் ஹிந்திப் படங்களில் நடிக்கச் சென்று விட்ட மாதவன் பல வருட இடைவெளிக்குப் பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

படமும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டு வருகின்றது.\

இந்த நிலையில் தான் இறுதிச்சுற்று வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த நினைத்தவர் சிங்கத்தின் குகைக்குள் தலையை விட்ட கதையாக தனது அடுத்த படத்துக்கான இயக்குநரை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

Related Posts
1 of 33

ஆமா, மாதவன் அடுத்து தமிழில் நடிக்கப் போகும் படத்தை கணவந் மனைவி இரட்டை இயக்குநர்களான புஸ்கர் – காயத்ரி இயக்குகிறார்களாம்.

டபுள் ஹீரோ கதையான இந்தப்படத்தில் ஒரு ஹீரோவாக மாதவனும், இன்னொரு ஹீரோவாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். விக்ரம் வேதா என்று படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் சரிதான், இந்த இரட்டை இயக்குநர்கள் இயக்கிய முந்தையை படங்களான ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அந்த இரண்டு படங்களுமே ரிலீசான வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டு கொண்ட படங்கள் மட்டுமல்ல, போஸ்டர் காசைக்கூட வசூலிக்காத படங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அப்படியிருந்தும் எப்படி இந்த இரட்டை இயக்குநர்கள் சொன்ன கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆனார் என்பது தான் அவரது நலம் விரும்பிகளே நொந்து போகும் சமாச்சாரம்.

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஹிட்டு கெடைச்சிருக்கு… : சூதானமா இருந்துக்கங்க மாதவன் ஜி?