நாகசைதன்யா படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்!

Get real time updates directly on you device, subscribe now.

முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

Related Posts
1 of 13

நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய ஒன்றாக அமையும்.

கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர். விறுவிறுப்பாக இதன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.