புதிய த்ரில் அனுபவத்தைக் கொடுக்க வரும் ‘கண்ணாடி’

Get real time updates directly on you device, subscribe now.

‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் தமிழ், தெலுங்கில் தயாராகும் கண்ணாடி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தீப் கிஷன். இவருக்கு ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

கார்த்திக் ராஜூ இயக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி படத்தை இயக்கி வருகிறார்.

Related Posts
1 of 136

ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்து செல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, திரைப்படங்களை இயக்க வருவதற்க்கு முன் பல படங்களின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை அமைத்த தன் சொந்த அனுபவங்களை கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி வி.எப்.எக்ஸ் ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம்.

மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்.