பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது : ஹீரோக்களுக்கு நாசர் அட்வைஸ்

Get real time updates directly on you device, subscribe now.

nassar1

‘சைவம்’ படத்தைத் தொடர்ந்து பறந்து செல்ல வா படத்தில் மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார் நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் மகன் லுத்புதீன். இப்படத்தில் லுத்புதீனுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ். தனபால் பத்மநாபன் இயக்கி உள்ளார்.

எல்லா திரைப்பட விழாக்களுக்கும் மறக்காமல் கலந்து கொள்ளும் நாசர் இதிலும் ஒரு நடிகர் சங்கத் தலைவராக மட்டுமே கலந்து கொண்டேன். லுத்புதீன் என் மகன் என்பதையும் தாண்டி நான் அவனை ஒரு நடிகனாக மட்டுமே இந்த மேடையில் பார்க்கிறேன் என்றவாரே பேச ஆரம்பித்தார்…

“எனது மகன் லுத்புதீன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல் இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

Related Posts
1 of 10

சினிமாவில் முதலீடு செய்பவர்கள் தற்போது குறைந்து வருகிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால் படங்கள் நன்றாக ஓட வேண்டும்.

அதற்கு படங்களில் நடிக்க வருபவர்களுக்கு நடிப்பு பயிற்சி அவசியம். பயிற்சி பெற்றுத் தான் ஒவ்வொருவரும் நடிக்க வேண்டும். எனது மகனிடமும் நடிப்பு பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க வேண்டும் என்று கண்டிப்போடு கூறினேன். அதோடு அவனை பாண்டிச்சேரிக்கு அனுப்பி பயிற்சியும் எடுக்க வைத்தேன். கதாநாயகன் என்றால் அது ரஜினியைச் சொல்லலாம். லுத்புதீன் கதையின் நாயகன் அவ்வளவு தான்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த படத்தால் நமக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்று பார்க்கக் கூடாது. அந்த படத்தில் இருந்து எவ்வளவு அனுபவங்களை பெற்றோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். என்றார் நாசர்.

இளவட்ட ஹீரோக்கள் கேட்டுக்கங்கப்பா…