தெறிக்க விடலாமா… : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரப்போகும் அஜித்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith1 (2)

ரு இனிய தருணத்தில் அஜித்தின் 57வது படத்தின் பூஜையைப் போட்டு ஆரம்பித்து விட்டார்கள்.

அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படத்தின் படப்பிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக இருக்கிறது.

எப்போதுமே பட்ஜெட்டில் படமெடுத்து கல்லா கட்டி வந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முதல்முறையாக இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

அஜித்துக்கு ஜோடி அனுஷ்காவா காஜலா என்று போட்டியிருந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Related Posts
1 of 65

ஆமாம், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் கமிட்டாகியிருக்கிறார்.

படத்தில் அஜித்தின் கேரக்டர் எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவிக் கிடந்தாலும்

படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்கிற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கெனவே கேங்ஸ்டார் படமான ‘பில்லா’ படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது. அதே போல இந்தப்படத்தின் கதையும் ஒரு கேங் ஸ்டார் படம் என்பதால் படத்தில் அரவிந்த்சாமி – பிரசன்னா என இரண்டு வில்லன்கள் இருப்பதால் அஜித்தும் இரட்டை வேடங்களில் வருவது சாத்தியம் தான் என்கிறது படக்குழு.

ஒரு அஜித் வந்தாலே ரசிகர்கள் ஸ்க்ரீனை கிழிச்சி தொங்க விட்டுடுவாங்க…. இதுல இன்னொரு அஜித்தின்னா கிழி கிழி தான்…!