லீக்கானது ரஜினியின் ‘கபாலி’ கெட்டப்!
இவங்க மத்தியில எந்த ரகசியத்தையும் காப்பாத்த முடியாது போலிருக்கே என்று படம் எடுப்பவர்கள் புலம்புவது அடிக்கடி நடக்கும்.
அது ரஜினி படத்துக்கே நடக்க ஆரம்பித்து விட்டது தான் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அதாவது செப்டம்பர் 1-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என்று உறுதியாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இன்று அவரது கபாலி கெட்டப் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகியிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நாள் முழுக்க நடந்த போட்டோ செஷனுக்கு உற்சாகமாக கலந்து கொண்ட ரஜினி. அவரை வைத்து எடுக்கப்பட்ட ஸ்டில்களை பார்த்து சில கரெக்ஷன்களைச் சொல்லியிருக்கிறார்.
அந்தப்படம் அதாவது வயாதான கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் கபாலி கெட்டப் ஸ்டில் தான் இப்போது லீக்காகியிருக்கிறது.
ஏற்கனவே படத்தில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறார் என்று செய்தி வெளியான நிலையில் லீக்கான ஸ்டில்லும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.