சலுகைக்கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே புதிய முயற்சி
தனது ‘வாங்க சாப்பிடலாம்’ ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு உணவு விலையில் 10 சத விகித சலுகை வழங்கினார்.
இப்போது ‘என் வழி தனி வழி’ படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டு இப்போது ஒரு புதுமை செய்து இருக்கிறார் ஆர்.கே. இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்கு வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைத்துக் கொள்வார்கள். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதும்.
ரசிகர்களுக்கு ஆர்கே வழங்கும் சலுகைக் கட்டணத்தில் மீதமாகும் பணத்தில் நொறுக்குத் தீனியையும் வாங்கிவிட முடியுமே. ரசித்து மகிழ ஒரு படமும் உண்டு,கூடவே கொறித்து மகிழ ஒரு சலுகையும் உள்ளது. சபாஷ்!
மற்ற நடிகர்களைப் போலில்லை ஆர்கே என்பதும் அவர் சொல்வது செய்வது எல்லாமே ‘என் வழி தனி வழி’ ‘ என்பதும் இப்போது புரியுமே