ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படம்!
பத்ரா, துளசி, சிம்ஹா, லெஜண்ட், சரைனோடு, ஜெய ஜானகி நாயக, மற்றும் சமீபத்தில் அகண்டா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் போயபத்தி ஸ்ரீனு. அவர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘அகண்டா’ மிகப்பெரிய பிளாக்பஸ்டராக, திரையரங்குகள் மீண்டும் பழைய பொலிவை பெற்றது. ரசிகர்களின் ஆராவார வரவேற்பில், திரைத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
போயபத்தி ஸ்ரீனு அடுத்ததாக, உஸ்தாத் ராம் பொத்தினேனியுடன் இணைந்து தனது அடுத்த பான்-இந்தியன் படத்தை தொடங்கியுள்ளார். பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனுவின் 10வது படமாக இப்படம் உருவாகிறது. இரண்டு அடுதடுத்த வெற்றிக்கு பிறகு, பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். தற்போதைக்கு ‘BoyapatiRAPO’ என இப்படம் தலைப்பிடப்பட்டுள்ளது. இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு இது 9வது படம். மேலும் பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.