’24’ படம் பார்க்க வரும் சுட்டிகளுக்கு மேஜிக் வாட்ச் பரிசு!

Get real time updates directly on you device, subscribe now.

suriya

டந்த வெள்ளியன்று ரிலீசான சூர்யாவின் 24 திரைப்படம் உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசானது.

அன்று முதல் இன்று வரை ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

முதல் மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கிறது.

Related Posts
1 of 46

இந்த நிலையில் இது விடுமுறை நேரம் என்பதால் 24 திரைப்படத்தை பெண்கள் தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து தியேட்டரில் படம் பார்க்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இதனால் 24 படத்தை பார்க்க வரும் சுட்டிக்குழந்தைகளை குஷிபடுத்தும் விதமாக வருகிற 11முதல் 24 திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் “ மேஜிக் வாட்ச்’’ ஒன்றை இலவசமாக தரப்பட இருக்கிறது!!

’24’ படத்தில் வாட்ச்க்கு மிக முக்கிய பங்கு உண்டு. கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கருவியான அந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளதால் தங்கள் குடும்பத்தோடு படத்தை பார்க்க வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் 24 வாட்சை பற்றி கேட்டு ஆர்வமாக தெரிந்து கொள்கிறார்கள்.

அதனால் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 11 தேதி முதல் 24 திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வாட்ச் வழங்கப்படும்.