‘கோ 2’ படத்தில் என்னை நானே பார்க்கிறேன்! : சிலிர்க்கும் பாபி சிம்ஹா

வருகின்ற மே 13 ஆம் தேதி நாளை மறுநாள் உலகெங்கும் கோலாகலமாக வெளி வர இருக்கும் ‘கோ 2’ படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா தனக்கு இந்தப் படம் பெரிய திருப்பம் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இதில் பாபிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் ‘பில்லா’ இயக்குநர் சக்ரி டோலேட்டி உடன் ‘பில்லா 2’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய சரத் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஒருவருடன் என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது. தவறென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்த கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டி இருப்பது எனக்கு பெருமை தான்.
‘கோ 2’ படத்தில் என்னுடைய இந்த கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ள தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. எனக்கும் நடிப்பு ராட்சஷன் பிரகாஷ்ராஜ் சாருக்கும் உள்ளக் காட்சிகள், திரை அரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகள் ஆகும்.
இந்த வருடம் முழுவதும் வெளிவர இருக்கும் என்னுடைய படங்கள் திரையுலகில் என் நிலையை இன்னமும் உயர்த்தும், அதற்கு முன்னோடியாக ‘கோ 2’ படத்தின் வெற்றி இருக்கும் என உறுதியாக கூறுகிறார் பாபி சிம்ஹா.