தயாரிப்பாளர் சங்கத்தை விடுவதாக இல்லை! : மல்லுக்கு நிற்கும் விஷால்!
நடிகர் சங்கத்துல இளவட்டப் பசங்க வந்த உடனே அவங்க செயல்பாடுகள் ரொம்ப சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கு.
நாசர் தலைமையில விஷாலோட டீம் ரொம்ப அழகா வேலை செய்றாங்க… என்று தமிழின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலரே பாண்டவர் அணியின் செயல்பாடுகளை மெச்சிப்பேசி வந்தார்கள்.
இன்று அதே தயாரிப்பாளர் சங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கிற அளவுக்கு தர லோக்கலாக இறங்கியிருக்கிறார் நடிகர் சங்க செயலாளர் விஷால்.
திருட்டு டிவிடி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்தியை தரவில்லை என்கிற ரீதியில் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி சில ஆவேசமான கருத்துகளை ஆனந்த விகடன் வார இதழில் கூறியிருந்தார் விஷால்.
அதைப் படித்த சில தயாரிப்பாளர்கள் அந்த விஷயத்தை சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவின் கவனத்துக்குக் கொண்டு போக உடனே சங்கத்தில் ஒரு சந்திப்பை நடத்தி விஷாலின் கத்திச்சண்டை படம் தவிர்த்து வேறு எந்த ஒரு புதுப்படத்துக்கும் ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.
இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் விஷால்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறது. இந்த நடிகர் சங்க நிலத்தில் இருந்த கடனை எல்லாம் அடைந்து, எவ்வித கடனும் இன்றி இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டு வருகிறோம். எந்தவொரு பதிலுமே இல்லை. ஆகையால், அடுத்த தேர்தலில் தயாரிப்பாளர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறோம். கேள்வி கேட்டு பதில் வரவில்லை என்றால் மாற்றமாக இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
என்று சொன்ன விஷாலின் அடுத்த மூவ் தமிழ்நாட்டு அரசியலா? என்றார் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையவே கிடையாது” என்றார்.
இப்போதைக்கு நம்பி வைப்போம்!