ஜாக்கிசான் ‘கபாலி’ பார்த்தார்! : ரஜினிகாந்த் ‘இரு கில்லாடிகள்’ பார்ப்பாரா?

Get real time updates directly on you device, subscribe now.

jackie-chan

ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில் “ இரு கில்லாடிகள் “ என்ற பெயரில் வெளியாகிறது.

Related Posts
1 of 64

நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆகிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் SKIP TRACE (இரு கில்லாடிகள்) படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த (SKIP TRACE ) படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாகும் இந்த இரு ”கில்லாடிகள்” படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பார்ப்பாரா..? என்று ஜாக்கிசான் ஆவலாக உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.