மரத்தோடு மாநாடு ; விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிலம்பரசன்

நடிகர் விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இன்று படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.