ஜெயலலிதா மறைவு : ரஜினி, விஜய் கண்ணீர் மல்க அஞ்சலி
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் நேற்று இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அதன் பிறகு அவரது உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்து.
ஜெ., உடலுக்கு அஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் காலை 11.30 மணிக்கு வந்தார். ஜெ., உடலை வணங்கி மலர் அஞ்சலி செலுத்தி ஒரு நிமிடம் மவுனமாக நின்று வணங்கினார் அப்போது அவர் கண் கலங்கினார். அதை தொடர்ந்து அருகில் நின்ற சசிகலாவின் அருகில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கே நின்ற அனைவருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து சில நிமிடம் அங்கே நின்று விட்டு சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் உடன் இருந்தனர்.
இதே போல் ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விஜய்யும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை பார்த்ததும் கண் கலங்கினார் விஜய். அவருடன் நடிகர் தாமுவும் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.