ஏம்மா அஞ்சலி : உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியல?
சித்தியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு, இன்ன பிற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க சென்னையிலிருந்து வெளியேறி தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு ஓடிப்போனார் நடிகை அஞ்சலி.
இதனால் கடந்த சில வருடங்களாகவே அவர் எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு படங்கள் மட்டுமே போதும் என்று முடிவெடுத்தவருக்கு அங்கும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நொந்து போனவர் மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக தனக்குத் தெரிந்த இயக்குநர்கள், ஹீரோக்களுக்கு தூது விட்டார்.
அதற்கு பலனாக தற்போது ‘ஜெயம் ரவி’யுடன் ‘அப்பா டக்கர்’ விமலுடன் ‘மாப்ளே சிங்கம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்தப் பிரச்சனையும் அஞ்சலி செய்வதில்லை என்றாலும் அவருக்குத் தான் அங்கு பெரிய சிக்கலாம். அதாவது ஸ்பாட்டில் அஞ்சலியை பார்க்கும் எல்லோருமே சித்தி விவகாரத்தைப் பற்றித்தான் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டு இம்சிக்கிறார்களாம்.
இதனால் அப்செட்டான அஞ்சலி இனி கமிட்டாகப் போகும் புதுப்படங்களில் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட திட்டமிட்டிருக்கிறார். அதாவது ஷூட்டிங்கை சென்னையில் வைக்கக் கூடாது. அதைத் தவிர வேறு எங்கு வைத்தாலும் நான் வரத் தயார் என்பது தான் அந்த கண்டிஷன்.
அதோடு தனக்கு மிகவும் பிடித்த ஏரியாவான ஹைதராபாத்தில் ஷூட்டிங் வைத்தால் எக்ஸ்ட்ரா நான்கைந்து நாட்கள் கால்ஷீட் தருகிறேன் என்று சலுகை தருகிறார் அஞ்சலி.
இதனால் அஞ்சலியை கமிட் செய்யப் போகும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இதென்ன புது சிக்கல் என்று தலையை சொறிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒருத்தரோட நிம்மதிக்கு எத்தனை பேர் நிம்மதியை இழக்க வேண்டியிருக்கு..!