எண்ணித் துணிக விழாவில் நடிகர் ஜெய் பேச்சு!

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் கூறியதாவது..,
“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி
இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாம் CS இசையமைத்துள்ளார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.