கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் !

Get real time updates directly on you device, subscribe now.

நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புதிறமை மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார், வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் உள்ளடக்கியது, இதை ஒரு நடிகை செய்வதென்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக ஆஷா ஷரத் பாராட்டப்படுகிறார். அதற்கு ஒரு உதாரணமாக Disney Plus Hotstar தளத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத் இப்போது பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.