ஆரவ் போர்வைக்குள் புகுந்த ஓவியா! : பிக்பாஸ் வீட்டுக்குள் ச்சீய்… அசிங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

oviya1

ரொம்ப சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை இரவு 9 மணி ஆனாலே பார்த்தே ஆக வேண்டுமென்கிற பைத்தியக்கார மனநிலையில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.

அந்தளவுக்கு வெளியில் இருக்கும் ரசிகர்களை பைத்தியமாக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று உள்ளே இருந்த விருந்தினர்களை பைத்தியமாக்கி அலைய விட்டார் பிக்பாஸ்.

அதில் தான் ச்சீய்… ச்சீய்… அசிங்கம் என்று சொல்கிற அளவுக்கு ஓவியா நடந்து கொள்வது போல டீஸர் ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது விஜய் டிவி.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆரவ்வும், ஓவியாவும் வந்ததிலிருந்தே நெருக்கமாக இருப்பது போல நடந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஓவியா ஆரவ்வை காதலிக்கிறேன் என்று சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே சொன்னார்.

Related Posts
1 of 32

ஆனால் ஆரவ்வோ ஓவியாவின் அந்தப் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படிம் போய்க்கொண்டிருக்கும் ஆரவ் – ஓவியா கெமிஸ்ட்ரி இன்று உச்சக்கட்டத்தை அடைந்திருப்பது போலத் தெரிகிறது. ஆமாம், ஓவியா ஆரவ்வின் படுக்கைக்கு சென்று அவரின் போர்வைக்குள் செல்ல முயற்சிக்கிறார், ஓவியாவின் அந்த நடவடிக்கையைப் பார்த்ததும் கடுப்பாகும் ஆரவ் உடனே எழுந்து வேறொரு படுக்கையில் படுத்து கொள்கிறார், ஆனால் மீண்டும் ஆராவை தொந்தரவு செய்கிறார் ஓவியா.

இதனால் ஆரவ் காயத்ரி மற்றும், சக்தியிடம் சென்று ”ஓவியா தொல்லை தாங்க முடியலை” என கூறிவிட்டு பிக் பாஸ்ஸிடம் புகார் கூறுகிறார், அவரோ அந்தப் பிரச்னையை நீங்களே பேசி தீர்த்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.

இதனால் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது, அந்த சண்டையில் இருவரும் நிரந்தரமாக பிரிந்து விடுகிறார்களா? அல்லது மீண்டும் சமாதனம் ஆகி நண்பர்களாக நட்பை தொடர்வார்களா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

ஓவியாவின் இந்த வித கீழ்த்தரமான நடத்தை ரியலா? அல்லது ரீலா என்பது இன்று இரவு தெரியும்.