அஜித்துக்குத்தான் முதலிடம் : விக்ரமுக்கு குட்பை சொன்ன காஜல் அகர்வால்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்போது காஜல் அகர்வாலுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.

இதனால் எங்கே தன்னுடையை மார்க்கெட் இத்தோடு இழுத்து மூடப்பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்த காஜல் அகர்வாலுக்கு உச்சகட்ட சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது அஜித் ஜோடியாக ஏ.கே 57 பட வாய்ப்பு.

அஜித் ஜோடியாக என்றதும் படத்தின் கதையைக் கூட கேட்காமல் கம்பெனி கொடுக்கிற சம்பளத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் காஜல் அகர்வால்.

அவர் அஜித்துடன் ஜோடி சேர்ந்த நேரமோ என்னவோ அடுத்ததாக கருடா படத்தில் விக்ரம் ஜோடியாக வாய்ப்பு வந்தது.

ஆனால் இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்டதால் அஜித் படம் தான் முக்கியம் என்று விக்ரமின் கருடா படத்திலிருந்து விலகி விட்டாராம் காஜல் அகர்வால்.

அஜித் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு விக்ரம் படத்துக்கு கிடைக்காது என்பதால் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்தாராம் காஜல்.

சரியான முடிவு!