‘ஏ.கே 57’ வேற மாதிரி… : ரூட்டை மாற்றுகிறார் அஜித்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

யதான பிறகு தன்னை விட பல மடங்கு வயசு வித்தியாசம் உள்ள நடிகைகளுடன் ஹீரோக்கள் டூயட் பாடுவது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழில் இருக்கின்ற முன்னணி ஹீரோக்கள் பலரும் தங்கள் வயசுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஏற்கனவே ‘மங்காத்தா’ படத்தில் அஜித் நிஜமான நரைத்த தலை முடியுடன் நடித்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போக படமும் சூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து நடிக்கின்ற எல்லா படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடனே நடித்து வருகிறார்.

எப்படி மங்காத்தாவில் கெட்டப்பில் வித்தியாசத்தை காண்பித்தாரோ? அதேபோல நடிப்பிலும் இப்போது நடித்து வரும் ‘ஏ.கே 57’ படத்தில்  சில மாற்றங்களை செய்யப் போகிறாராம் அஜித்.

Related Posts
1 of 54

சென்ற வாரம் ரிலீசான ரஜினியின் ‘கபாலி’யில் டூயட், பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லாமல்  தனது வயசுக்கேத்த கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதேபோல ‘ஏ.கே 57’ படத்தில் அஜித்தும் நாயகியுடன் டூயட், குத்தாட்டம், பஞ்ச் டயலாக்குகள் என எதுவும் இல்லாமல் நடிக்கப் போகிறாராம். இந்தமாதிரியான காட்சிகள் எதுவும் படத்தில் வேணாம் என்று இயக்குநர் சிவாவுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம்.

நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால் கூட இதில் அஜித்துக்கு காதலியாக இல்லாமல் மனைவியாகத்தான் வருகிறார்.

ஆக இது வழக்கமான அஜித் படமாக இல்லாமல் வேற மாதிரியாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.

மாற்றம் நல்லது!