நானும் ஒரு காலத்துல ‘பிச்சைக்காரன்’ தான்! : மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

Get real time updates directly on you device, subscribe now.

a.r.murugadass1

‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான்காவது வெற்றியை அறுவடை செய்யத் தயாராகி விட்டார் விஜய் ஆண்டனி.

செண்டிமெண்ட்டில் ஊறிப்போன தமிழ்சினிமாவில் இப்படி ஒரு டைட்டிலை வைக்க எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் தைரியமாக படத்துக்கு ‘பிச்சைக்கரன்’டைட்டிலை டிக் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் ( எப்படியாவது கஷ்டப்பட்டு உச்சரிச்சிடுங்க…) அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சசி.

‘555’ படத்துக்குப் பிறகு சசி இயக்கும் படம் இது!

படத்தின் ஆடியோ பங்ஷனில் பேசிய இயக்குநர் சசி ”இந்த ஆடியோ பங்ஷனுக்கு யாரை சீப் கெஸ்ட்டா கூப்பிடலாம்னு யோசிச்சப்ப கே ஆர் பிலிம்ஸ் சரவணன் என்னிடம் வந்து ‘ஏ.ஆர்.முருகதாஸ் சார் வந்தால் நன்றாக இருக்கும் சார்’ என்று கேட்டார். அடுத்த நொடி முருகதாஸ் சாரை காண்டாக்ப் பண்ணி பேசினார். வர சம்மதித்து விட்டார். சரவணன் கேட்டதை செஞ்சு கொடுத்த சந்தோஷத்துல என்னோட மொபைலை ஸ்டைலா தூக்கிப் போட்டேன். என்னை அப்படி ஒரு இடத்துல வெச்சிருக்கிற ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு நன்றி” என்றவர் ஹீரோ விஜய் ஆண்டனி பக்கம் பேச்சை திருப்பினார்…

”நான் விஜய் ஆண்டனி நடிச்ச படங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுறப்போ அவர் அதை காதுலேயே வாங்கிக்காம ”நாம எப்போ சார் சேர்ந்து படம் பண்ணப் போறோம்?”னு பேச ஆரம்பிச்சிடுவார். நான் வேறு எந்தக் கதை சொல்லி அதை அவர் ஒகே பண்ணி இருந்தாலும் அவருக்கு நான் நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் . காரணம் அவர் ஒரு தயாரிப்பாளர். நான் ஒரு இயக்குனர் . ரெண்டு பெரும் அவங்க வேலையை ஒழுங்கா பாக்கப் போறோம். அவ்வளவுதான். ஆனா இந்தப் பிச்சைக்காரன் கதையை ஒகே செய்ததற்காக நான் விஜய் ஆண்டனிக்கு நன்றி சொல்லணும் . இது வேறு எந்த ஹீரோவும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இதில் உள்ள கமர்ஷியல் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு அதை ஒகே செய்யும் தெளிவு விஜய் ஆண்டனிக்கு இருந்தது. படத்தோட டைட்டிலைப் பத்தி எல்லோருமே ஒருவிதமா சொன்னாங்க. ஆனால் இப்போ படத்தைப் பார்த்த பிறகு சொல்கிறேன். இந்தப் படத்துக்கு பிச்சைக்காரன் என்ற டைட்டில் தான்பொருத்தமான டைட்டில் என்றார்”.

Related Posts
1 of 22

நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்து தனக்கும் சசிக்கும் உள்ள நட்பைப் பற்றி பேசினார்…

எனக்கு சசியோட வெற்றி ரொம்ப முக்கியம். இந்தப் படத்தோடட்ரைலரைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. முதல்ல இந்த டைட்டிலை நான் மாத்தச் சொன்னேன். ஆனா சசி மாத்தல. அது ஏன்னு ட்ரெய்லரை பார்த்த பிறகு தான் தெரிஞ்சது. டைட்டில்ங்கறது ஒரு படத்தோட குறியீடுதான், அது சென்டிமென்ட் இல்லங்கறத புரிஞ்சிக்கிட்டேன்.

நான் உதவி இயக்குனரா இருந்து தனியா படம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருந்த காலம் அது. அந்த காலம் எனக்கு ரொம்ப முக்கியமான காலம். ஏன்னா, நம்மகூட பேசறதுக்கு கூட ஆள் இருக்க மாட்டாங்க, சாப்பாடு போடறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க, பாக்கெட்ல காசு இருக்காது. அந்த சமயத்துல நான் சசியைய சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான்.

அப்ப அவர்கிட்ட நான் தனியா படம் பண்ணப் போறதப் பத்தி சொன்னேன். உடனே அவர், “ எனக்கு வாழ்த்து சொல்லிட்டு தனியா படம் பண்ணப் போறேன்னு சொல்றீங்க, கையில காசு இருக்காது. ஏதாவது கஷ்டம்னா என்கிட்ட சொல்லுங்க. கேக்கறதுக்கு கூச்சப்பட்டுட்டு பட்டினியா மட்டும் இருந்துடாதீங்கன்னு,” சொன்னாரு.

அவர்  அப்படி சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது, ரொம்ப பலமா இருந்தது. அந்த டைம்ல நான் இந்த படத்தோட டைட்டில் மாதிரி தான் இருந்தேன், சசியோட மனசு இந்த டைட்டில் மேல இருக்கிற கிரீடம் மாதிரி இருந்துச்சி. அவரோட அந்த மனசுக்காகவே இந்தப் படம் வெற்றியடையணும்னு நினைக்கிறேன். என்றார் நெகிழ்வுடன்!

நிகழ்ச்சியில் பேசிய கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன் ”இதுதான் நாங்க விநியோகம் பண்ற முதல் படம். இந்த படத்தை கமிட் பண்ணின உடனே நெறைய பேர் ஏம்பா முதல் படம் விநியோகம் பண்றீங்க… இப்படி டைட்டில் இருக்கிற படத்தையா வாங்கி விநியோகம் பண்ணனும் என்று எங்களை மட்டம் தட்டுனாங்க. ஆனால் உண்மையிலேயே சொல்றேன். இந்த பிச்சைக்காரன் படம் எங்களை கோடீஸ்வரன் ஆக்கிடுச்சு. ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடக்கிறதுக்கு முன்னாடியே எல்லா ஏரியாவும் வித்துடுச்சு. கண்டிப்பா எங்களோட நம்பிக்கை வீண் போகாது. நம்பி வாங்கிய எல்லோரையும் இந்த ‘பிச்சைக்காரன்’ ‘கோடீஸ்வரன்’ ஆக்குவான்” என்றார்.