‘வானத்தை பார்த்து துப்புனா அது உங்க மேல தான் விழும்’ : விஷாலை மறைமுகமாக தாக்கிய ராதிகா!
எப்படி பார்த்திபன் இல்லாத ஆடியோ பங்ஷன்களை பார்ப்பது குறைவோ அதேபோலத்தான் ஹன்ஷிகா இல்லாத படங்களும்..! கைவசம் ஒரு டஜன் படங்களை வைத்துக் கொண்டு தமிழ், தெலுங்கு என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான ஜெயம்ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’ வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில் இருக்கும் அவருடைய நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்களில் ஒன்று தான் ‘உயிரே உயிரே’.
80-களில் கனவுக்கன்னியாக இருந்த ஜெயப்பிரதாவின் மகன் சித்து ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை விஷாலின் ‘சத்யம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.
உத்தரபிரதேச அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் அமர்சிங், பிரபல பாலிவுட் ஹீரோ அனில்கபூர், கன்னடத்தில் பிரபலமான ஹீரோவும், அரசியல்வாதியுமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா, ஜெயப்பிரதாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் ராதிகா, ஸ்ரீப்ரியா என பல பிரபலங்கள் கலந்து கொண்ட ஆடியோ பங்ஷன் இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லா பிரபலங்களும் தங்களுக்கும், ஜெயப்பிரதாவுக்கும் உள்ள காலம் கடந்த நட்பைப் பற்றிப் பேசி ஓய்ந்தார்கள்.
பின்னர் பேச வந்த நடிகை ராதிகாவோ ஜெயப்பிரதாவின் மகனைப் பார்த்து உனக்கு ரெண்டு அம்மாக்கள் இருக்காங்க. ஒண்ணு ஜெயப்பிரதா இன்னொன்னு நான் என்றவன் ஹீரோ சித்துவுக்கு அட்வைஸ் சொல்கிற சாக்கில் நடிகர் சங்க விவகாரத்தை மனதில் வைத்து நடிகர் விஷாலை மறைமுகமாக திட்டித் தீர்த்தார்.
“ இந்த காலத்து இளம் ஹீரோக்கள் எல்லோரும் ரொம்ப சுயநலமா இருக்காங்க… அன்பு, பாசம் இதெல்லாம் என்னன்னே தெரியல. அவங்களுக்குள்ள நல்ல ப்ரெண்ஷிப்பே கிடையாது. ” வானத்தைப் பார்த்து துப்புனா அது நம்ம மேல தான் விழும். இதை அந்த ஹீரோக்கள் புரிஞ்சு நடந்துக்கிட்ட சரி” என்றார் ஆத்திரம் அடங்காமல்…