காதலித்தவரையே திருமணம் செய்யப் போகும் ஸ்ரேயா – என்ன வயசு தான் கொஞ்சம் இடிக்குது…

Get real time updates directly on you device, subscribe now.

மார்க்கெட் இருக்கும் வரை நடித்து சம்பாதிப்பது என்பது தான் தற்போதைய ஹீரோயின்களின் எண்ணம். இடையில் திருமண வயது வந்து விட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தப் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், த்ரிஷா என சில குறிப்பிட்ட முன்னணி நடிகைகள் திருமண வயதைத் தாண்டி விட்ட பிறகும் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் இன்றுவரை நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பிரபல நடிகை ஸ்ரேயாவும் இருந்தார்.

Related Posts
1 of 2

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் பிஸியாக இருந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவும் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

அதோடு வயதும் 35 ஆன நிலையில் தற்போது திருமணத்துக்கு தயாராகி விட்டார். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழில் அதிபருமான ஆண்ட்ரோ கோஸ்சேவை இந்த மாதம் மார்ச் 17ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயா திருமண வயதைக் கடந்து விட்டாலும் அவரது காதலருக்கு இப்போது 25 வயது தான் ஆகிறது. இருந்தாலும் இருவருமே நீண்டநாள் காதலர்கள் என்பதால் இந்த அளவு கடந்த வயது வித்தியாசமுள்ள திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் கொடுத்து விட்டார்கள்.