1000 தியேட்டர்கள்! : பிரம்மாண்டமாக ரிலீசாகும் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

Get real time updates directly on you device, subscribe now.

simbu

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் குளோபல் இன்போடெயின்மெண்ட் பி.லிட் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படம் இந்த வாரம் ஜூன் 23ம் தேதி உலகம் முழுக்க மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கிறது.

படத்தில் மதுர மைக்கேல், அஸ்வின் தாதா என இரண்டு பவர்ஃபுல்லான கேரக்டர்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார் சிம்பு. அதோடு இன்னும் அவர் ஏற்று நடித்திருக்கும் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளின் ரகசியம் படு சீக்ரெட்டாக இருக்கிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனா கான் என நான்கு நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 39

இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் இந்த ‘அஅஅ’ படத்தின் முதல் பாகத்தில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாதா கெட்டப்புகள் மட்டுமே இடம்பெறும் என்றும் மீதி இரண்டு கெட்டப்புகள் இரண்டாவது பாகத்தில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இப்படி சிம்பு நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவிலும், இரண்டு பாகங்களாகவும் தயாராகியிருக்கும் ‘அஅஅ’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்து காணப்படுகிறது. அதனால் உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டர்களில் ரிலீசாகிறதாம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 425க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகிறது.

கேரளாவில் 70 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 50 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் என உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டர்களில் ரிலீசாகிறது.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மாஸ் ஹிட்டுக்குப் பிறகு சிம்புவும், ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இப்படத்தில் இணைந்திருப்பதால் இந்த வெற்றிக்கூட்டணியின் நிச்சய வெற்றி இப்போதே உறுதியாகி விட்டது.