ஹீரோவானாலும் காமெடி தான் கை கொடுக்குது! – ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தை ஆரம்பித்த சந்தானம்

காமெடி நடிகராக இருந்து திடீரென்று ஹீரோவானவர் சந்தானம். ஹீரோவாக அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவினாலும் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.
இதற்கிடையே ‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் பைனான்ஸ் பிரச்சனையால் முடங்கிக் கிடக்கின்றன.
இதனால் சந்தானத்தின் படங்களே வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில் பல பிரச்சனைகளைக் கடந்து சக்க போடு போடு ராஜா படம் ரிலீசானது. அந்தப்படமும் தோல்வியைத் தழுவிய நிலையில்
தற்போது தனது நடிப்பில் வெளியாக வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹண்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் அவரே தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தில்லுக்கு துட்டு 2’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இந்த இரண்டாம் பாகத்தை இயக்க, தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.
தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ள இப்படத்தின் துவக்க விழா மார்ச் 1-ம் தேதி ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.