நியூயார்க்கில் த்ரிஷா நியூ இயர் கொண்டாட்டம் : கூடவே போன பாய் ப்ரெண்ட் யார் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

trisha1

2017 புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கி விட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் 2017ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வானவேடிக்கைகள் ஃகலர்புல்லாக உற்சாகத்தை தந்து கொண்டுருக்கிறது.

இந்தப் புத்தாண்டை திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவது வழக்கம்.

அதிலும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டையும் வெளிநாட்டில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

இந்த 2017ம் ஆண்டு புத்தாண்டையும் வெளிநாட்டில் கொண்டாட தனது நெருங்கிய நண்பர்களுடன் நியூயார்க் சென்றிருக்கிறார் த்ரிஷா.

Related Posts
1 of 18

அங்கு ஃபப் ஒன்றில் த்ரிஷா ஆண் மற்றும் பெண் நண்பருடன் நெருக்கமாக நின்று ஆட்டம் போடுகிற வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே சமயத்தில், அந்த ஆண் நண்பரை ”யாருப்பா இது பவர் ஸ்டார் மாதிரி புவர் ஸ்டார்”  செம கலாய் கலாய்த்திருக்கிறார்கள். சிலர் யாருப்பா இது புது பாய் ப்ரெண்ட் என்றும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்கள்.

அப்படி சந்தேகத்தை கிளப்பிய அந்த ஆண் நண்பர் வேறு யாருமல்ல,  த்ரிஷாவின் ஆடை வடிவமைப்பாளரும், பிரபல ஃபேஷன் டிசைனருமான சிட்னி ஸ்லாடன் தான் அவர்.

த்ரிஷா மாடலிங் செய்து கொண்டிருந்த போதே அவர் நெருங்கிய நண்பர். அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. ஏதாவது பார்ட்டி, பாரீன் டூர் என்றால் சிட்னி இல்லாமல் த்ரிஷா சென்றதே இல்லையாம்.

இப்போ சந்தேகம் தீர்ந்துச்சா ரசிகாஸ்?