‘பைரவா’வுக்காக எங்கள் வருமானத்தை தடுக்கிறார் : கீர்த்தி சுரேஷ் அப்பா மீது பரபரப்பு புகார்!

Get real time updates directly on you device, subscribe now.

keerthi-suresh1

லசலப்பே இல்லாமல் அமைதியான நீரோடைப் போல போய்க் கொண்டிருந்த கேரள திரையுலகில் தியேட்டர் உரிமையாளர்களின் பங்கு கேட்பு விவகாரம் பெரும் சர்ச்சையை கிளம்பியிருக்கிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே சினிமா தியேட்டர் களில் திரையிடப்படும் மலையாள படங்களுக்கு அதன் வசூலில் கூடுதலாக 10 சதவீதம் தர வேண்டுமென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Related Posts
1 of 89

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு இழுத்துக் கொண்டு போவதுக்கு காரணமே கீர்த்தி சுரேஷின் அப்பாவும், மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான சுரேஷ்குமாரின் சுயநலம் தான் என்று குமுறுகிறார்கள் சக தயாரிப்பாளர்கள்.

வரும் பொங்கலுக்கு விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ”பைரவா” படம் ரிலீசாகிறது. அந்தப் படத்துக்கு கேரளாவில் அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பொங்கல் வரை எந்தப்படமும் அங்கு ரிலீசாகாதபடி இந்த போராட்டத்தை தொடர வைத்திருக்கிறார். அவர் மகள் நடித்த படம் என்பதற்காக எங்கள் வருமானத்தை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் பைரவாவுக்கு தியேட்டர்களை அதிகமாக்கும் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ் அப்பா சுரேஷ்குமார்.