விஜய் சேதுபதி இடத்தில் ஜி.வி.பிரகாஷ்! : கணித்துச் சொன்ன பிரபல டைரக்டர்
சிலரை சிலரோடு ஒப்பிடும் போது வியப்பு வரும். சிலரை சிலரோடு ஒப்பிடும் போது கெக்கே பிக்கே வென்று சிரிப்பு மட்டும் தான் வரும். இயக்குநர் பாண்டிராஜ் எந்த மூடில் அப்படி ஒரு ஜோசியத்தை மேடையில் கணித்துச் சொன்னாரோ.. அந்த நிகழ்ச்சியில் இருந்த அத்தனை பேருக்கும் அவர் சொன்னது சிரிப்பைத் தான் வரவழைத்தது.
படம் ஓடுகிறதோ இல்லையோ? ஆனால் அடுத்தடுத்த புதுப்படங்களை கமிட் செய்து கொண்டே போகிறார் ஜி.வி.பிரகாஷ். அந்த பட வரிசையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ரிலீசாகப் போகும் படம் தான் புரூஸ்லி.
2016ம் ஆண்டில் அதிகப்படங்கள் நடித்த ஹீரோ என்ற பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பெருமை ஜி.விக்கும் கிடைக்கும் என்பது தான் இயக்குநர் பாண்டிராஜின் கணிப்பு போல…
நிகழ்ச்சியில் பேசிய பாண்டிராஜ் இந்த வருஷம் (2016) விஜய் சேதுபதி நடிச்ச படங்கள் தான் அதிகமா ரிலீஸ் ஆகியிருக்கு. அப்படிப்பட்ட அவருக்கு சரியான போட்டியா ஜி.வி.பிரகாஷ் இருப்பார். ஏன்னா அடுத்த வருஷம் (2017) முழுக்க இவர் நடித்த படங்கள் தான் நிறைய வரப்போகுது. அவ்வளவு படங்களை கைவசம் வெச்சிருக்கார் என்று சொல்ல அரங்கமே கைதட்டல்களால் அசைந்து ஓய்ந்தது.
கணிப்பு தயாரிப்பாளர்களுக்கும் இனிப்பாக இருக்கட்டும்!