அடவி இசை வெளியீட்டு விழா

Get real time updates directly on you device, subscribe now.


ஸ்ரீ க்ரிஷ் பிக்‌சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரித்துள்ள படம் அடவி. இப்படத்தை ரமேஷ்.ஜி இயக்கியுள்ளார். வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படக்குழு உள்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஜி.வி குமார், பாடலாசிரியர் சினேகன் உள்பட பலரும் கலந்துகொண்டார்கள். இப்படம் பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. “இப்படம் இன்றைய காலத்திற்கு தேவையான அரசியலைப் பேசியுள்ளது” என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.