“மியூசிக் ஸ்கூல்” படத்தின் பிரஸ்மீட்டில் ஸ்ரேயா சரண் பேச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. 
  
நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது..

சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார். இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்.  ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி  ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து  நடித்துள்ளனர்.

யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. 

#Musicschool #மியூசிக் ஸ்கூல்