டெங்கு காய்ச்சலால் பாதிப்பு : நடிகர் விவேக்கின் 13 வயது மகன் மரணம்!

Get real time updates directly on you device, subscribe now.

vivek1

மிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 13.

கடந்த ஒருமாத காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரசன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இருந்த காய்ச்சலால் முதலில் அவருக்கு எந்தவித நோய் என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு கேன்சர் என்றும், மூளைக்காய்ச்சல் என்றும், டெங்கு காய்ச்சல் என்றும் மாறி மாறி செய்திகள் வந்தன.

இறுதியாக அவர் டெங்கு காய்ச்சலால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டியறிப்பட்டு அதற்கான சிகிச்சை சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் தரப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் இன்று அவர் உயிரிழந்தார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தனது காமெடி மூலம் சிரிக்க வைத்த விவேக் மகனின் மரணம் அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மகனின் இழப்பு விவேக்கையும், அவரது குடும்பத்தாரையும் பெரிய அளவில் பாதித்துள்ளதால் ஊடகங்கள் செய்தி சேகரிக்க அங்கு வருவதை தவிர்க்குமாறு அவர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மகனை இழந்து வாடும் விவேக் குடும்பத்தாருக்கு மன தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.