அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் பட டீசர்!

Get real time updates directly on you device, subscribe now.

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

Related Posts
1 of 14

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது.ஐமேக்ஸ் மற்றும் 3 டி யில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Adipurush #ஆதி புருஷ்