அடியே- விமர்சனம்

சாதா காதலில் டெக்னாலஜி ஆல்ட்ரனெட் உலகம் ஆகியவற்றை கலந்தால் அதுதான் அடியே
தன் சிறு வயது காதலி இன்னும் தன்னை நினைவு வைத்திருப்பதை உணரும் ஜிவி பிரகாஷ் காதலியை மீட் செய்யச் செல்கிறார். அப்போது ஏற்படும் விபத்தில் ஜிவி ஆல்ட்ரனெட் உலகிற்குச் சென்றுவிடுகிறார். அங்கு அவரது காதலி என்னவாக இருக்கிறார்? ஜிவியின் காதல் கை கூடியதா என்பதே அடியே படத்தின் மீதிக்கதை
இந்தப்படத்திற்கு பக்கா பொருத்தம் ஜிவி. சீனுக்கு சீன் அசத்தியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். 96 படத்தின் சின்ன திரிஷா இதில் நாயகி. சின்னச் சின்ன இடங்களிலும் செந்தாழினியாகவே நெஞ்சில் பதியும்படி நடித்துள்ளார். ஆர்.ஜே விக்னேஷ் காமெடிக்கு முழு கியாரண்டி கொடுக்கிறார். வெங்கட் பிரபுவின் கேரக்டரும் அவரது நடிப்பும் சிறப்பு
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் இரு உலகங்களும் வெவ்வேறு லைட்டிங்கில் மின்னுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் மெலடி பாடல்களில் சிறப்பாக உழைத்துள்ளார். பின்னணி இசையும் போதுமான அளவிற்கு இருக்கிறது
புதிய முயற்சி புதிய ஐடியாக்கள் என முன்பாதியில் படம் நம்மை பரபரப்பாக மற்றும் ஜாலியாக வைத்துள்ளது. பின்பாதியில் முன்பாதியில் இருந்த எனர்ஜி படத்தில் மிஸ்ஸிங்! ஜிவி ஏன் மாற்று உலகத்திற்கே செல்ல நினைக்கிறார். இங்கிருந்தே தன் காதலியை கரம் பிடிக்க முயற்சி செய்யலாமே? என்ற லாஜிக் கேள்விகளும் படம் பார்க்கும் போதே எழுகிறது. மாற்று உலகத்தில் ஏ.ஆர் ரகுமான் டான்ஸ் மாஸ்டர், பிரபுதேவா மியூசிக் டைரக்டர் போன்ற சுவாரஸ்யமான விசயங்கள், மற்றும் 2K கிட்ஸ் என்சாய் பண்ணும் சங்கதிகள் எல்லாம் அடியேவில் இருப்பதால் படம் கல்லா கட்டும் என்பது உறுதி
3.25/5