பேச்சுலர் – விமர்சனம்
2K கிட்ஸை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள 1980-காலத்திய கதைதான் பேச்சுலர். காதலன் காதலியின் அதீத நெருக்கத்தால் காதலிக்கு வயிற்றில் கரு வளர்கிறது. காதலன் அதைக் கலைக்கச் சொல்ல..காதலி மறுத்து நிற்க…முடிவு என்ன என்பதே பேச்சுலர்
ஜீவி பிரகாஷ் இயக்குநரிடம் தன்னை ஒப்புக்கொடுத்து நடித்திருக்கிறார். சுமார் பத்து பக்கம் வசனம் மட்டுமே படத்தில் பேசியிருக்கிறார். அவர் பக்கத்தில் இருக்கும் அவ்வளவுபேரும் பக்கம் பக்கமாக பேசினாலும் மனிதர் அசராமல் ரியாக்ஷன் கொடுத்தே சமாளிக்கிறார். நாயகி திவ்யபாரதி நச் தேர்வு. எமோஷ்னல்& ரொமான்ஸ் இரண்டிலும் செம்ம ஸ்கோர். துண்டு போடும் அளவிலான சின்ன கேரக்டர் என்றாலும் மிஷ்கின் செம்ம..பக்ஸ், முனிஷ்காந்த் உள்பட நண்பர்களாக வரும் டஜன் கணக்கான நடிகர்கள் சூப்பர் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சாதா பேச்சுலர்களின் அறைகளை காட்டும் போதும் சரி, ஸ்பெசல் பேச்சுலர்களின் பேன்ஸி அறைகளை காட்டும் போதும் சரி தேனி ஈஸ்வரின் கேமரா ஆசம் ஆசம். சித்துகுமாரின் பின்னணி இசைக்கு ஹார்ட்டீன்கள். எடிட்டர் சான் லோகேஷ் இயக்குநரிடம் சண்டை போட்டாவது அரைமணி நேரப்படத்தை வெட்டியிருக்கலாம். வில்லன்கள் இல்லாத படத்திற்கு படத்தின் நீளம் தான் வில்லன்
படத்தின் மேக்கிங்கில் இருந்த கவனத்தை இது யாருக்கான கதை என்பதிலும் செலுத்தி இருந்தால் இயக்குநர் சதிஷ் செல்வகுமாருக்கு இப்படம் ஓர் நச் அடையாளமாக இருந்திருக்கும்
படத்தில் அவர் கோயம்புத்தூர் பாஷையில் எழுதியிருக்கும் வசனங்கள் எல்லாமே அட அட! மையக்கதையில் ஹீரோ கேரக்டர் படுவீக்-ஆக இருப்பதாலே பேச்சுலரின் கதைக்குள் ஹீரோவை பின் தொடர முடியவில்லை. கதை திரைக்கதையில் போதிய தெளிவில்லாததால் பேச்சுலர் கேங்ஓவரில் சிக்கிவிடுகிறான்
2/5