ஆர்.கே நகரில் வந்த யோசனை? – அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஷால்!

”தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை” என்று குற்றம் சாட்டிய நடிகர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். அவருக்கு முன்னதாக கமலும் தன் பங்குக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் ஒருபக்கம் இறங்கி வேலைகளைச் செய்து வருகிறார்.
இப்படி முன்னணி நடிகர்கள் எல்லோருமே நடிக்கும் தொழிலை விட்டு விட்டு ஆளாளுக்கு தனியாக கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளும் திட்டத்தில் செயல்பட்டு வரும் சூழலில் நடிகர் விஷாலும் தனது அரசியல் எண்ட்ரியை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் விஷாலின் இந்த அரசியல் எண்ட்ரி முடிவுக்கு ஆர்.கே நகரின் அவருக்கு ஏற்பட்ட அவமானமும், அதைத்தொடர்ந்து அவர் செய்த யோசனையும் தான் காரணமாம்.
”ஆர்.கே.நகரில் என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நான் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், மக்களில் ஒருவனாக இதை கூறுகிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவர்களது கொள்கைகளை தெரிவிக்கவில்லை. அதுவரை காத்திருக்க வேண்டும். ரஜினியிடம் இருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவரது அடுத்தடுத்த முடிவுகள் என்ன என்பதை அறிய ஆவலாகவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கும் விஷால் தனது அரசியல் கட்சி வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறாராம்.
ஒரு தமிழ்நாட்டை ஆள எத்தனை பேர் கெளம்புறாய்ங்க..?