கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் !

Get real time updates directly on you device, subscribe now.

மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர், திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள், புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக ஸ்டைலீஷ் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கவுள்ளார்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது, இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும். ஆர் சி ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக இருக்கும் அந்த வகையில், இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.