அகிலன்- விமர்சனம்

அகதிகளுக்கு உணவு கொண்டு செல்லும் தமிழன்னை கப்பலை தடையில் இருந்து நீக்கி மீண்டும் கடலில் பயணிக்க வைக்க அகிலன் ஆடும் ஆடுபுலி ஆட்டமே இந்த அகிலன்
ஜெயம் ரவி இருண்மை நிறைந்த முகத்தோடு படமெங்கும் வருகிறார். அசால்டான உடல்மொழி, கருத்த மேக்கப், தெனாவெட்டான வசன உச்சரிப்பு, உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் சாமர்த்தியம் என சகல ஏரியாவிலும் புகுந்து விளையாண்டுள்ளார். ஆட்டுக்கு எதற்கு தாடி… நாட்டுக்கு எதற்கு கவர்னர்? என்பது போல இந்தப்படத்திற்கு எதற்கு இரண்டு ஹீரோயின்கள்? என்று கேட்க வைக்கிறது இருவரின் போர்ஷன்களும். அதிலும் தான்யா வரும் புட்டேஜ் எல்லாம் எங்கப்பா போச்சு? ரகம். வில்லன்கள் நிறைய படத்தில். பட் அனைவருமே நிறைவு. தோழர் கேரக்டரில் வரும் மதுசூதனராவ் மனதில் பதிகிறார்
சாம். சி.எஸ் கை கட்டை அவிழ்த்தவன் ஆர்வத்தில் கை காலை ஆட்டுவது போல..ஆக்ஷன் கன்டென்ட் என்பதால் தன் கைகளை வைத்து இஷ்டத்திற்கு ஆட்டி ஆட்டி வாசித்துள்ளார் போல..ரா ரா ரா ரா என அவரது BGM நம் காதுகளை ராவும் போதெல்லாம் ஆத்தாடி.. விவேக் ஆனந்த் சந்தோஷம் தனது ஒளிப்பதிவில் மொத்த வித்தையையும் காட்டியிருக்கிறார்.
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் கதையெழுதும் போதே சமூக அரசியல் உலக அரசியலைப் பேச வேண்டும் என்ற முன் முடிவை எடுத்திருப்பார் போல. படத்தில் சின்னச் சின்ன கேப் கிடைத்தாலும் உலக அரசியல் வந்துவிடுகிறது. படத்திற்கு நேர்த்தியான கதை வாய்த்திருக்கிறது. அதைச் சரியான திரைக்கதையோடு அணுகியிருந்தால் அகிலன் தூள் பரத்தியிருப்பான். ஆனால் இந்த அகிலன் எதை நோக்கிப்பயணிக்கிறான் என்ற குழப்பம் முன்பாதி முடியும் வரையிலுமே இருக்கிறது. அதன்பிறகு டேக் ஆப் ஆகும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை..
Final point என்னன்னா அகிலன்- ஆர்வமே மட்டுமே..நோ ஆற்றல்
2.5/5