சிம்புவுக்கும், தனுஷுக்கும் என்ன வித்தியாசம்? : புட்டு புட்டு வைத்த கௌதம்மேனன்!

Get real time updates directly on you device, subscribe now.

simbhu

சிம்புவுக்கும், தனுஷூக்கும் இடையிலான பழக்க வழக்கங்களில் ஆயிரம் ஒற்றுமை இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

ஆனால் இருவருக்கும் உள்ள வித்தியாசம்? என்ன என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது.

அதை ரசிகப் பெருமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும், தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

Related Posts
1 of 70

ஒரே இயக்குநர் இரண்டு எதிர் எதிர் ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்களை இயக்குவதால் இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தனுஷை வைத்து இயக்குவதில் இதுவரை எந்த புகாரும் கூறாத கெளதம் மேமன் சிம்புவை வைத்து இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்புக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்காததை வருத்தத்துடன் ஏற்கனவே மீடியாக்களிடம் புலம்பியிருந்தார். என்றாலும் தனுஷ், சிம்பு இருவரை வைத்தும் படம் இயக்கியுள்ளீர்கள். அவர்கள் இருவரிடமும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு உண்மையாக பதிலளித்திருக்கிறார் கெளதம் மேனன்.

அதில் “அவர்கள் இருவரையும் நமக்கு ஏற்றவாறு எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். படப்பிடிப்பிற்கு தனுஷ் சொன்ன நேரத்திற்கு வருவார். ஆனால் சிம்புவோ சொன்ன நேரத்திற்கு வர மாட்டார் இதுதான் இரண்டு பேருக்குமிடையே உள்ள வித்தியாசம்’’ என்று கூறியிருக்கிறார்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டை சிம்பு மீது ஏற்கனவே பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சொன்னதுண்டு. அப்போதெல்லாம் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் அதே மாதிரி ஒரு புகாரை கூறி சிம்புவின் அந்த நடத்தையை மேலும் உறுதி செய்திருக்கிறார் கெளதம் மேனன்.