காதல் vs காதல் – இது ஆரி நடிக்கிற காதல் படம்ங்க…

Get real time updates directly on you device, subscribe now.

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு.

60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது. 2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதைக்களத்தோடு தயாராகி வரும் படம் தான் காதல் vs காதல்.

ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

டிசம்பர் 2-ம் தேதி காலை சென்னை முகப்பேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Related Posts
1 of 5

”இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை” என்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன். இவர் ஏற்கனவே ‘அய்யனார்’ படத்தை இயக்கியவர்.

படத்துக்கு ஏ.ஜி. மகேஷ் இசையமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கிரியேட்டிவ் டீம்ஸ் ஈ.ஆர். ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.