பட்ஜெட்ல ஒரு படம்! : இறங்கி வந்தார் வெங்கட்பிரபு

Get real time updates directly on you device, subscribe now.

venkat-prabhu1

‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படத்தால் சூர்யாவை விட வெங்கட்பிரபுவுக்கே அதிக பாதிப்பு போலிருக்கிறது.

அந்தப்படம் ரிலீசாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் எந்த ஹீரோவிடம் வெங்கட்பிரபுவால் கால்ஷூட் வாங்க முடியவில்லை.

Related Posts
1 of 4

”அது சூர்யா சாருக்காக எடுத்த படம், என்னோட ஸ்டைல் அந்தப்படத்துல இல்லவே இல்லை என்று கால்ஷூட் கேட்டுப் போகிற ஹீரோக்களிடம் சொல்லிப்பார்த்தும் பலம் பூஜ்யம் தான்.” இதனால் அலுத்துப் போனவர் இப்போது தனது பழைய பட டீமான ‘சென்னை – 600028’ டீமை கூப்பிட்டு சேர்ந்து புதுசா ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்டிருக்கிறார்.

எப்படி இருந்த ‘வெங்கட்பிரபு இப்படி ஆயிட்டார்’ என்று அவர்களே இரக்கப்படுகிற அளவுக்கு நிலைமையை நேரில் பார்த்தவர்கள் ”கண்டிப்பா பண்ணலாம். நீங்க எப்போ எங்க எந்த நேரம் ஷூட்டிங் வெச்சாலும் ஸ்பாட்ல இருப்போம்” என்று தைரியம் சொல்லியிருக்கிறார்கள்.

பட்ஜெட் பெரிதானால் அது எவ்வளவு பெரிய பாதிப்புகளை சேர்த்து கொண்டு வரும் என்பதை உணர்ந்தவராக இந்தப்படத்தை பட்ஜெட்டில் எடுக்க ப்ளான் போட்டிருக்கிறார் வெங்கி.