விவசாயிகள் மரணத்திலும் அஜித்துக்கு பப்ளிசிட்டி : அடத்தூ….. கேவலப்பட்ட அஜித் ரசிகர்கள்!

வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனாலும் தமிழ்சினிமாவில் அஜித் மாஸ் ஹீரோ லெவலில் தான் இருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் யார் என்று பார்த்தால் அவரது ரசிகர்கள் தான். சமூகவலைத் தளங்களில் அட்ராசிட்டி செய்யும் அஜித் ரசிகர்கள் சமீபகாலமாக அவரைப்பற்றி ஆஹோ – ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட 15 லட்சம் கொடுத்தார், சென்னையில் வெள்ளம் வந்த போது 10 லட்சம் கொடுத்தார், வர்தா புயல் வந்த ஓய்ந்தவுடன் மரங்களை நட்டார் என்று மீடியாக்களுக்கே தெரியாத புதிய புதிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும்.
இப்படி அஜித்தைப் பற்றி வருகிற செய்திகள் உண்மையா? பொய்யா? என்றால் 100 சதவீதம் பொய்யானதாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் அஜித்தைப் பற்றி அவரது புகழைப் பரப்புவதற்காக அவரது ரசிகர்களே அவிழ்த்து விடும் பொய் மூட்டைகள்.
சரி தன்னைப் பற்றி இப்படி தவறான தகவல்கள் வரும்போது சம்பந்தப்பட்டவர்கள் அதை மறுப்பதோ? தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடிவடிக்கை மேற்கொள்வதோ? தான் ஒரு பிரபலத்தின் வேலையாக இருக்கும்.
ஆனால் அந்த விஷயத்திலும் அஜித் தனக்கென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறார் போல? ஆமாம், இதுவரை தன்னைப் பற்றி வருகிற எந்த ஒரு செய்தியையும் மறுத்தோ அல்லது ஆமாம் போட்டோ ஒரு ஸ்டேட்மெண்ட் கூட அஜித் விட்டதில்லை. அப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் ரசிகர்களை அவர் கண்டித்ததும் இல்லை, எச்சரித்ததும் இல்லை. இதனால் ரசிகர்களின் உச்சகட்ட எல்லை மீறல் தான் விவசாயிகளின் இறப்பிலும் பப்ளிசிட்டியாக சில தினங்களுக்கு முன்பு சமூகவலைத் தளங்களில் அரங்கேறியிருக்கிறது.
பருவமழை பொய்த்துப் போனது, மத்திய, மாநில அரசுகளில் பாராமுகம் உள்ளிட்டவைகளால் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகிறார்கள். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவங்களை முன்வைத்து அஜித்துக்கு பப்ளிசிட்டி செய்திருக்கிறார்கள் கேவலப்பட்ட அஜித் ரசிகர்கள்.
”விவசாயிகளின் உயிரிழப்பிற்கு இரங்கலை தெரிவித்து அவருடைய AK57 படத்தின் முழு #சம்பளத்தையும் இறந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் உதவியளரிடம் தெரிவித்துள்ளாராம்… இது அஜித்குமாரின் உதவியாளரிடம் இருந்து கிடைத்த தகவல்…”
இப்படி ஒரு செய்தி கடந்த ஒரு வாரமாகவே சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
வழக்கம் போல இந்தச் செய்தியும் அஜித்துக்கு பில்டப் கொடுக்கும் விதமாக அவரது ரசிகர்கள் கிளப்பி விட்ட முழுக்க முழுக்க பொய்யான செய்தி தான் என்று அவரது உதவியாளர் மூலமாகவே உறுதியாகியிருக்கிறது.
தன் அபிமான ஹீரோவை தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது தான்.
அதற்காக உலகுக்கே சோறுபோடுகிற விவசாயிகளின் தற்கொலையிலும் பப்ளிசிட்டி கொடுப்பது கேவலத்திலும் கேவலமான செயல், அடத்தூ… என்று அஜித் ரசிகர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இனிமேலாவது நல்ல புள்ளையாக இருங்களேன் தல ஃபேன்ஸ்!
ஆடியோ வடிவில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் >>> :